சென்னை
திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறியதாவது:
கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு என பொய் பிரசாரம் செய்யப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது.முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது
திமுகவில் 1 கோடி பேருக்கு மேல் இந்துக்கள் உள்ளனர். கருணாநிதி ஆட்சியில் இந்து கோயில்கள் பாதுகாக்கப்பட்டன;கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்துப் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறி உள்ளார்.