வானில் பறந்து வந்த காகங்கள் தரையில் விழுந்து இறந்ததால் பரபரப்பு

44 Views
Editor: 0

கொரோனா தொற்று நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது..

                               இறந்த காகங்கள்

காஞ்சிபுரம்:

பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு மார்க்கெட் அருகே நேற்று காகங்கள் வானில் பறந்து வந்தன. திடீரென ஒன்றன்பின் ஒன்றாக 15 காகங்கள் மயங்கி கீழே விழுந்தன. அங்கு இருந்தவர்கள் அந்த காகங்களுக்கு தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் 15 காகங்களும் பரிதாபமாக செத்தன.

 

இது குறித்து அங்கு இருந்தவர்கள் வனத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உயிரிழந்த காகங்களை சுற்றி பிற காகங்கள் வட்டமிட்டு கத்திக்கொண்டே இருந்தன. கொரோனா தொற்று நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

 

மாநிலச்செய்திகள்