தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் , சென்னை மாநகரம் தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறந்து விற்பனை செய்யபட்டு வருகிறது. டாஸ்மாக் பணியாளர்களும் கொரோனா தொற்றால் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாநில செயலாளராக இருந்த ராஜா என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் டாஸ்மாக் கடை விற்பனையாளராக பணியாற்றிய ரவிச்சந்திரன் என்பவரும் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரோனா முன்களபணியில் உள்ள மற்ற அரசு துறை பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ளது படி, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு, அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் அடங்கிய கூட்டு குழு சார்பாக மனு அளித்துள்ளனர்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று சோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.