கைதி படத்தில் வருவது போல.. தமிழக எல்லையில் இரவு நேரத்தில் நடந்த அதிரடி லாரி சேஸ்.. சுவாரசிய சம்பவம்!

42 Views
Editor: 0

சென்னை: தமிழக எல்லையில் ஆம்பூர் அருகே நேற்று இரவு நடந்த சுவாரசியமான லாரி சேசிங் ஒன்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

சென்னை: தமிழக எல்லையில் ஆம்பூர் அருகே நேற்று இரவு நடந்த சுவாரசியமான லாரி சேசிங் ஒன்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் கார்த்தி நடித்து வெளியான கைதி படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது.இரவு முழுக்க கார்த்தி லாரியில் செல்வதும், அதை வில்லன்கள் பின் தொடர்ந்து வருவதும் என்று மொத்தமாக படமும் திரில்லாக செல்லும்.

இந்த நிலையில் அதேபோல் தமிழக எல்லையில் ஆந்திரா செல்லும் வழியில் ஆம்பூர் அருகே சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. நேற்று இரவு நடந்த இந்த சம்பவம் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ன நடந்தது

நேற்று ஆம்பூரில் இருக்கும் மாதனூர் சோதனை சாவடி பகுதியில் எப்போதும் போல போலீசார் சோதனை செய்து வந்து இருக்கிறார்கள். கொரோனா லாக்டவுன் அமலில் இருக்கும் காலம் என்பதால் கூடுதலாக போலீசார் இருந்துள்ளனர். அதேபோல் அங்கு வருவாய்த்துறை ஆய்வாளரும் இருந்துள்ளார். அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக போலீசார் சோதனை செய்துள்ளனர்.

லாரி வந்தது

லாரி வந்தது

அப்போது அந்த சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. பின்பக்கம் தார்பாய் போட்டு மூடப்பட்ட லாரி ஒன்று வேகமாக அந்த பாதை வழியாக வந்தது. இதை பார்த்ததும் லைட் அடித்து, லாரியை நிறுத்த போலீசார் முயன்று இருக்கிறார்கள். ஆனால் அந்த லாரி வேகமாக, போலீசாரை மோதுவது போல வந்து இருக்கிறது. ஆந்திர பதிவு எண் கொண்ட லாரி ஆகும் இது.

மிக வேகம்

மிக வேகம்

வேகமாக வந்த அந்த லாரி, அப்படியே அங்கிருந்த பேரிகேட்டை உடைத்துக் கொண்டு சென்றது. தடுப்புக்காக போடப்பட்டு இருந்த பேரிகேட்டை மொத்தமாக உடைத்துக் கொண்டு அந்த லாரி வேகமாக சென்றது. இதையடுத்து உடனடியாக அங்கிருந்த துணை வட்டாட்சியர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் இருவரும் களமிறங்கினர். என்ன நடந்தாலும் லாரியை விட கூடாது என்று முடிவு செய்தனர்.

சேஸ்
சேஸ் தங்கள்

பைக்கிலேயே வேகமாக அந்த லாரியை துரத்திக் கொண்டு சென்றனர்.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வேகமாக அந்த லாரியை அவர்கள் துரத்திக் கொண்டு சென்றனர். இரண்டு பேர் மட்டும் பைக்கில் துணிச்சலாக அந்த லாரியை துரத்திக் கொண்டு சென்றனர். கடைசியில் இருவரும் சேர்ந்து மாதனூர் மேம்பாலம் அருகே அந்த லாரியை மடக்கி பிடித்தனர்.

ஏன் இப்படி
ஏன் இப்படி

அதன்பின் ஏன் இப்படி அந்த லாரி நிற்காமல் சென்றது என்று விசாரிக்கப்பட்டது. அந்த லாரியில் 15 டன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடாக இதை அவர்கள் இடமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விசாரணை நடக்கும் போதே லாரி ஓட்டுநர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.போலீசார் தற்போது அவரை தேடி வருகிறார்கள்.

 

மாநிலச்செய்திகள்