தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இடைத்தேர்தலை நடத்த
முடிவு : தேர்தல் ஆணையம்

45 Views
Editor: 0

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்தியிலும் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது..

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்தியிலும் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் 8 மாநிலங்களில் 56 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதற்கான ஆலோசனைக் கூட்டமும் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில், நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

தமிழகம் உள்பட 8 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும், காலியாக உள்ள தொகுதிகளுக்கு உரிய நேரத்தில் தேர்தல் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாநிலச்செய்திகள்