தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:
*ரேசன் கடை ஊழியர்களுக்கு போதுமான முகக்கவசம், கையுறை, கிருமிநாசினிகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த தடுப்பு உபகரணங்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
*மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திய பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
* மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு வீட்டிற்கான இழப்பீட்டு தொகை 67.90 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தும்படி அரசுக்கு நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி உத்தரவிட்டுள்ளார்.