சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் தஞ்சாக்கூர் ஊராட்சியைச் சேர்ந்தது புலவர்சேரி கிராமம். ஒரு காலத்தில் இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் இலவசமாக நிலங்களைக் கொடுத்து உள்ளார்.
அதன் அடிப்படையில் இங்கு 250 ஏக்கர் பாசனம் பெறும் கண்மாய் குடிமாரமாத்துப் பணிகள் தொடங்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்க்கு கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக நிதி ஒதுக்கி முறையாகத் தேர்தல் நடத்தி குடிமாரமாத்துப் பணிகள் தொடங்கி உள்ளது இதில் நான்கு மடைகள், ஒரு கழுங்கள் ஆகியவற்றைப் பராமரிப்பு செய்யபட்டு கரைகள் அமைக்கப்படுகின்றன.
இன்று தொடக்க பூஜைகள் நடத்தப்பட்டு பணி தொடங்கப்பட்டது. சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணி மேற்பார்வையில் பாசன விவசாய சங்கத் தலைவர் கணபதி அம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனால் விவசாயிகள் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு வேலை நடப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Editor: 0










