ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்

40 Views
Editor: 0

ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்..

                               எடப்பாடி பழனிசாமி

சென்னை:

கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முக கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

இந்நிலையில் ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில் வழங்கப்பட உள்ளது. ரூ.13 கோடியே 48 லட்சம் மறுபயன்பாடு துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளன.
 

மாநிலச்செய்திகள்