ரேஷன் அரிசியில் மட்டுமே உள்ள சில சிறப்பு...

41 Views
Editor: 0

ரேஷன் அரிசியில் மட்டுமே உள்ள சில சிறப்பு, அம்பானி அதானி போன்ற பணம் படைத்தவர்கள் உண்ணும் அரிசியில் கூட கிடையாது!.

ரேஷனில் போடப்பட்டதால் ரேஷன் அரிசி என்கிறோம் மற்றபடி நன்றாக சுத்தம் செய்து சாப்பிட்டால் ரேஷன் அரிசியும் மற்ற விலையுயர்ந்த அரிசிகளை போலத்தான். இந்த வகை அரிசிகள் parboil முறையில் தயாரிக்கப்படுகின்றன. அதாவது ரேஷன் அரிசியில் நெல்லானது ஊறல், அவியல், உலரவைத்தல், பாலிஷ் என இந்த செயல்முறைகளுக்கு எடுத்துக்கொள்ளும் நேரம் மிகவும் குறைவு. அதனாலே மற்ற அரிசிகளை விட நிறம் குறைவாக இருக்கும். ஆனால் இதுதான் உடலுக்கு ஆரோக்கியமானது.  

ரேஷன் அரிசி சாப்பிட்டு பழக்கமானவர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு இரண்டு வேளை உணவே போதுமானது. மீண்டும் பசி எடுப்பதே அரிது. ரேஷன் அரிசி உண்ட பின்னர் கிடைக்கும் நிறைவு மற்ற எந்த காஸ்லியான அரிசி உண்டாலும் கிடைப்பதில்லை. ஏனெனில் மற்ற வகை அரிசியில் செய்யப்பட்ட சாதம் என்றால் வயிற்றுக்கு உண்ட திருப்தி கிடைக்க, உண்டு கொண்டே இருக்க வேண்டும். ஒரு குக்கர் சாதத்தை ஒரே ஆள் உண்டால் கூட ஆச்சர்யம் இல்லை.

ration-rice-benefits ambani

இதுமட்டுமா? ரேஷன் அரிசி சாப்பாடு அடுத்தநாள் வரை தண்ணீர் ஊற்றவில்லை என்றால் கூட தாங்கும். மற்ற வகை அரிசி சாப்பாடு என்றால் ஒரு நாள் எல்லாம் தாக்குபிடிக்காது. மதியமே நசநசத்து போய்விடும். ரேஷன் அரிசி உண்டால் சத்து இருக்காது, ஆரோக்கியம் பாதிக்கப்படும் என சிலர் கூறுவதுண்டு அதெல்லாம் சுத்தப்பொய். இன்றும் ரேஷனில் அரிசி போடுகிறார்கள் என்றால் அடித்துபிடித்து ஓடும் நடுத்தர குடும்பமே அதற்கு சாட்சி. காரசாரமான சுண்டக்காய் குழம்பு, எண்ணெய் கத்திரி இந்த குழம்புகளுடன் ரேஷன் அரிசி காம்போ மாஸ் தான். ஒருசில உணவுகளின் ருசி, செலவு செய்து உண்ணும் பெரிய ஹோட்டல்களில் கூட கிடைக்காது. 

ration-rice-benefits ambani

பிறகு ஏன்  பலரும் ரேஷன் அரிசியை ஒதுக்குகிறார்கள் என்றால், காரணம் ரேஷன் அரிசி என்ற பெயரே! சமூக அந்தஸ்து போல அதுவும் ஆகிவிட்டதாலே பலர் இதனை தவிர்த்து வருகின்றனர். ரேஷன் அரிசி உண்டால் வயிற்று வலி ஏற்படும், ஒத்துக்காது என கூறுவதெல்லாம், அவர்கள் அந்த சாப்பாட்டை உண்ணும் போதே ஒருவித முகசுளிப்புடன் உண்ணுவதால் அந்த எண்ணங்களே அவர்களுக்கு வயிற்றுவலியை உண்டு செய்து விடுகிறது. 

ration-rice-benefits ambani

உணவகங்களில் இட்லி தோசை என்றால் முழுக்க முழுக்க நல்ல அரிசி கொண்டு தயார் செய்கிறார்கள் என சிலர் நினைத்து கொண்டிருப்பார்கள். அதெல்லாம் கிடையாது. எல்லாம் ரேஷன் அரிசி மிக்சிங் தான். முழுக்க முழுக்க நல்ல அரிசி போட்டு சுட்டால் கூட இட்லி பந்து போல இருக்காது. ரேஷன் அரிசி போட்டால் தான் அந்த மிருதுவான தன்மை கிடைக்கும். அதை அறிந்தே நடுத்தர குடும்பங்களில் இட்லி தோசை என்றாலே ரேஷன் அரிசி ஆட்டிய மாவில்தான்.

மாநிலச்செய்திகள்