சென்னை: மார்ச்24ம் தேதி கடைசி தேர்வில் கலந்துகொள்ளாத பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று மறுதேர்வு நடக்கிறது.
தமிழகத்தில் ஊரடங்கால் மார்ச் 24ம் தேதி பிளஸ் 2 இறுதித் தேர்வில் மாணவர்களில் பலர் கலந்து கொள்ள முடியவில்லை. இவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று பெரும்பாலோனார் கோரிக்கை எழுப்பினர்.
அந்த கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் இன்று மறுதேர்வு நடக்கிறது. 743 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்கின்றனர்.
289 மையங்களில் தேர்வு நடக்கிறது. மாணவர்கள் அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்துக்கு செல்ல சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.