கந்தனுக்கு அரோகரா… இது சூப்பர் ஸ்டார் ஸ்டெயில்…!

40 Views
Editor: 0

கந்தனுக்கு அரோகரா… இது சூப்பர் ஸ்டார் ஸ்டெயில்…! தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா…இது கேப்டன் ஸ்டெயில்..! (வீடியோ).

சென்னை : கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் கடவுள் முருகனின் கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் ஆபாசமாக சித்தரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்து அமைப்பு கொடுத்த புகாரின் பேரில் கறுப்பர் கூட்டத்தின் நிர்வாகிகள் செந்தில்வாசன், சுரேந்திரன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், இந்து கடவுளுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும் பல்வேறு இந்து அமைப்பினர் கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்காக தமிழக அரசுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்ததுடன், கந்தனுக்கு அரோகரா என்னும் ஹேஸ்டேக்கையும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், கறுப்பர் கூட்டத்தை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் டுவிட்டரில் வீடியோவுடன் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், கந்த சஷ்டி கவசத்தை அவர் படித்துக் கொண்டிருக்கிறார்.

“வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்,” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா என்னும் ஹேஸ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

மாநிலச்செய்திகள்