சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து எட்டாவது நாளாக தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை!
சென்னையில் இன்று (ஜூலை 28) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,037 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 5,013 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கம் விலை 5,000 ரூபாயைத் தாண்டியுள்ளது.
அதேபோல, நேற்று 40,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 192 ரூபாய் உயர்ந்து 40,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலை!
ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5,262லிருந்து இன்று ரூ.5,286 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 42,096 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 192 ரூபாய் உயர்ந்து 42,288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.5,166 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,876 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.5,431 ஆகவும், கேரளாவில் ரூ.4,769 ஆகவும், டெல்லியில் ரூ.5,081 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.5,106 ஆகவும், ஒசூரில் ரூ.4,982 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,985 ஆகவும் இருக்கிறது.
வெள்ளியின் விலை!
வெள்ளியிலும் இன்று விலையேற்றம் நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.70.90லிருந்து இன்று ரூ.72.90 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 72,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.