கல்லூரிகளுக்கு புது உத்தரவை பிறப்பித்த சென்னை பல்கலைக்கழகம்…! மாணவர்கள் அதிர்ச்சி

42 Views
Editor: 0

சென்னை: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது..

சென்னை: கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.  இதையடுத்து அவர்கள் கல்லூரிகளில் சேர ஆயத்தமாகி வருகின்றனர். ஆகையால் அனைத்து கல்லூரிகளிலும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்கி உள்ளது.

மாணவர் சேர்க்கை பணிகள் முடிந்தால் வகுப்புகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் ஒரு உத்தரவை வெளியிட்டு உள்ளது. அதன் பதிவாளர் சீனிவாசன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக.19ம் தேதி தொடங்க வேண்டும்.

ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 2 மற்றும் 3ம் ஆண்டு மாணவர்களுக்கு, முதுகலை 2ம் ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை ஆக. 3 முதல் நடத்த வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கையை செப். 10ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

மாநிலச்செய்திகள்