மேட்டுப்பாளையத்தில் மேலும் ஒரு யானை உயிரிழப்பு

44 Views
Editor: 0

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், நெல்லிமலை காப்புக்காட்டில் உயிருக்குப் போராடி வந்த யானை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது..

கோவை: மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில், நெல்லிமலை காப்புக்காட்டில் உயிருக்குப் போராடி வந்த யானை, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தது:

 

மேட்டுப்பாளையம் வனசரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை காப்புக்காட்டில், 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, உடல் சோர்வு அடைந்த நிலையில் நகர முடியாமல் ஓரிடத்தில் படுத்துக் கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், உயிருக்கு போராடிய நிலையில் தரையில் படுத்திருந்த யானையை நேற்று கண்டறிந்தனர். தேக்கம்பட்டி வன கால்நடை மருத்துவர் மற்றும் மாவட்ட வன மருத்துவ குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி யானை உயிரிழந்தது.


latest tamil news

வனத்துறையினர் கூறுகையில், 'யானையின் மேல் இடது தாடையின் கடவாய் பற்களுக்கு முன், 20 செ.மீ., ஆழத்தில், 9 செ.மீ., விட்டத்தில் காயம் இருந்தது. மற்றொரு யானையுடன் ஏற்பட்ட சண்டையில் இந்த காயம் ஏற்பட்டிருக்கலாம். காயத்தில் புழுக்கள் இருந்தன. இதனால், யானைக்கு காயம் ஏற்பட்டு 8 முதல் 10 நாட்களாக ஆகியிருந்திருக்கலாம். இந்தக் காயத்தால் உணவு உண்ண முடியாமல் மிகுந்த சோர்வடைந்து யானை இறந்திருக்கக்கூடும்' என்றனர்.

'மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் தொடர்ந்து யானைகள் உயிரிழப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் மரணங்கள் குறித்து, தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என, வன ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

மாநிலச்செய்திகள்