சென்னையின் 15 மண்டலங்களிலும் இலவச டயாலிஸிஸ் முகாம்கள் அமைக்க திட்டம்..
முதல்கட்டமாக வள்ளுவர் கோட்டம், ரெட்டேரி, வளசரவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 70 டயாலிஸிஸ் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் தனியார் பங்களிப்புடன் இலவச டயாலிஸிஸ் முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முகாம்கள் அமைப்பதற்கான இடம் மற்றும் மின்சார தேவையை மாநகராட்சி ஏற்பாடு செய்து தரும்.
தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி பவுண்டேசன் டயாலிஸிஸ் முகாம்களை பராமரிக்கும் என்றும் ரோட்டரி கிளப்புகளிடம் இருந்து தேவையான மருத்துவ உபகரணங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக வள்ளுவர் கோட்டம், ரெட்டேரி, வளசரவாக்கம், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் 70 டயாலிஸிஸ் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
திருவெற்றியூர், அம்பத்தூர், தண்டையார்பேட்டை மண்டலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலவச டயாலிஸிஸ் முகாம்கள் அமைக்கப்படும் என்று மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் மதுசூதன ரெட்டி தெரிவித்தார்.