கல்விக்கு மதச்சாயம் பூசப்படுகிறது: தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை என்ற மத யானை புகுந்து நாசம் செய்கிறது: மு.க.ஸ்டாலின் கருத்து.!!!
சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி கருத்து மேடை நடைபெற்றது. இதில், கல்வியாளர்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலி கருத்து மேடையில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கை என்ற மத யானை புகுந்து நாசம் செய்கிறது. புதிய கல்வி கொள்கை வேத கலாச்சாரத்தை திணப்பதாகவும், கல்விக்கு மதச்சாயம் பூசப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் பாதியில் கல்வியை நிறுத்தும் சூழல் உருவாகும். அனைவருக்கும் கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்காத நிலை ஏற்படும். இந்தியாவின் பலமே இளைஞர் சக்திதான் என்பார்கள், அதை நாம் இழக்கும் நிலை ஏற்படும். மக்களை ஏமாற்றுவமதாக நினைத்துக்கொண்டு பிரதமர் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறார். தமிழகத்தில் கல்வி ஒளியை அணைக்க விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.