புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும்:முதல்வருக்கு திமுக கூட்டணி கட்சிகள் கடிதம்:
சென்னை,
மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு, நாடு முழுவதும் பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர், "கல்வியில் மும்மொழி கொள்கையை திணிப்பதை புதிய கல்விக் கொள்கை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது" கடும் கண்டனத்துக்குரியது என்ற கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளன. புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித்தலைவர்கள் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.