இன்று முதல் வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்:
நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைத்துறையான வங்கிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், 100 சதவிகித பணியாளர்களுடன் தமிழகத்தில் வங்கிகள் இயங்கும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட சில சேவைகள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் அனைத்துவிதமான சேவைகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகள், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் முகக்கவசம், தனிநபர் இடைவேளை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்றும் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது