இ-பாஸ் முறையில் தளர்வு வேண்டுமா... மக்கள் கருத்து என்ன?
இ-பாஸ் முறையில் தளர்வு வேண்டும் என்ற கோரிக்கையைச் சிலர் முன்வைக்கிறார்கள். இது குறித்து மக்கள் கருத்து என்ன?
தற்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், பல கெடுபிடிகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மக்களில் பலர் பொது போக்குவரத்து இல்லாவிட்டாலும் தங்களின் அன்றாட பணிகளுக்குச் சென்று வருகின்றனர். இதனிடையே சென்னை போன்ற பெருநகரங்களிலிருந்து சொந்த ஊருக்குச் சென்ற பலர், மீண்டும் பணிக்குத் திரும்ப இ-பாஸ் விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர். இப்படியாக இ-பாஸ் பெறுவது கடினமாக இருப்பதாகவும் அவசரத் தேவைக்குக்கூட பாஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.