சென்னை மண்டலத்தில் மட்டுமே பாதிப்பு அதிகம் : இன்றைய மாவட்ட வாரியான நிலவரம்!!

42 Views
Editor: 0

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது..

சென்னை மண்டலத்தில் மட்டுமே பாதிப்பு அதிகம் : இன்றைய மாவட்ட வாரியான நிலவரம்!!

 

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,79,144ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 1,091 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. இதுவரையில் 1,06,096பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 408 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 336 பேருக்கும், திருவள்ளூரில் 320 பேருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் :-

 

மாநிலச்செய்திகள்