ஆன்லைன் வகுப்புகள் வரும் 12ம் தேதி முதல் ஆரம்பம்…! சென்னை அண்ணா பல்கலை. அறிவிப்பு

46 Views
Editor: 0

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது..

ஆன்லைன் வகுப்புகள் வரும் 12ம் தேதி முதல் ஆரம்பம்…! சென்னை அண்ணா பல்கலை. அறிவிப்பு:

 

சென்னை: ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் நடைபெறும் என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கையாக நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

கல்லூரிகளை பொருத்த வரையில் இறுதியான முடிவுகள் எடுக்கப்பட வில்லை. முதலாமாண்டு, 2ம் ஆண்டு மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் இறுதியாண்டு மாணவர்களின் தேர்வு விவரங்கள் பற்றி எந்த முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை.

ஊரடங்கால் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின்  செமஸ்டர் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறவில்லை. இந் நிலையில், ஆகஸ்ட் 12 முதல் பொறியியல் கல்லூரி ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் கூறி இருப்பதாவது: ஆன்லைன் வகுப்புகள் வரும் 12ம் தேதி முதல் அக்டோபர் 26 வரை நடைபெறும். அடுத்த செமஸ்டர் ஆன்லைன் வகுப்புகள் டிசம்பர் 14 முதல் தொடங்கும். அனைத்து சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் உண்டு என்று தெரிவித்துள்ளது.

இது தவிர செமஸ்டர் தேர்வுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 28ம் தேதி முதல் நவம்பர் 9ம் தேதி வரை செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகிறது.

 

மாநிலச்செய்திகள்