பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை... மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 10இல் முடிவு: அமைச்சர் செங்கோட்டையன்:
“அரசு பள்ளிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆகஸ்ட் 10ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பார்”
நவம்பர் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று நேற்று முதல் தகவல்கள் வந்த நிலையில், அது பொய்யானது என்றும் அதனை நம்பவேண்டாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக ஏன் அரசு முடிவெடுக்கவில்லை என்று கேள்விகள் எழுந்தன. இதற்கு, “அரசு பள்ளிகளில் புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆகஸ்ட் 10ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பார்” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள்டம் தெரிவித்தார்.
மேலும், பள்ளிகள் திறப்பு எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “பள்ளிகள் திறப்பது குறித்து கொரோனா பாதிப்பு முடிந்த பின்னரே ஆலோசிக்கப்படும்” என்றும் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதிலிருந்து, பள்ளிகள் திறக்கப்படும் நாள் குறித்து வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்பதை பள்ளிக்கல்வித்துறை அழுத்தமாகக் கேட்டுக்கொள்கிறது.
அதே சமயம், கொரோனாவிலிருந்து மெல்ல மெல்ல நிலைமை இயல்புக்குத் திரும்பி வருகிறது. இந்நிலையில், பள்ளிகளின் திறப்பு குறித்து அரசு எடுக்கப்போகும் முடிவின் மீது கல்வியாளர்கள் , ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.