உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க அனுமதி அளித்த வகையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க பயிற்சியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை...!!!

41 Views
Editor: 0

சென்னை: தமிழகத்தில் உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க தமிழக அரசு நாளை அனுமதி அளித்துள்ள நிலையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது. .

உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க அனுமதி அளித்த வகையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க பயிற்சியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை...!!!

சென்னை: தமிழகத்தில் உடற்பயிற்சி, யோகா நிலையங்களை திறக்க தமிழக அரசு நாளை அனுமதி அளித்துள்ள நிலையில், தற்காப்பு பயிற்சி நிலையங்களையும் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் நிபந்தையற்ற பலகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திலும் தற்போது தமிழகத்தில் பரவி வரும் அதிகளவு தொற்றால் 7ம் கட்ட ஊரடங்காக ஆகஸ்ட் மாதம் முழுவதும் பொதுமுடக்கம்  அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளைமுதல் உடற்பயிற்சி மற்றும் யோகா நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கராத்தே உள்ளிட்ட பயிற்சி நிலையங்களையும் திறக்கவேண்டுமென்று பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில், ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் கைபேசி மற்றும் கணினி உள்ளிட்டவைகளிலேயே நேரம் விரையமாவதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் வீடுகளில் முடங்கியுள்ள தங்களை வலிமை உள்ளவர்களாக மாற்றிக்கொள்ள தற்காப்பு கலைகள் மிகவும் அவசியமான ஒன்றாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தற்காப்பு நிலையங்களை விரைவாக திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்பது பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.

மாநிலச்செய்திகள்