சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்:
கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையம் சென்றபோது பெண் பாதுகாவலர் ஒருவர் இந்தி தெரியாததால் இந்தியரா? என கேட்டதாக வெளியான செய்தி கடும் சர்ச்சையை எழுப்பியது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே குரலாக எதிர்ப்பு தெரிவித்தன.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்தி தெரிந்த மத்திய ஊழியர்களை ஆங்கிலமும் தெரிந்து கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தகவல் தெரிவித்துள்ளது. கனிமொழியிடம் கேள்வி எழுப்பிய பெண் காவலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.