ஃபேன் ஸ்விட்ச் போட்ட 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

42 Views
Editor: 0

சென்னையில் ஃபேன் ஸ்விட்ச் போட்ட 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

ஃபேன் ஸ்விட்ச் போட்ட 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு:

 

சென்னையில் ஃபேன் ஸ்விட்ச் போட்ட 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் தஷ்ணாமூர்த்தி. இவர் அப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வருகின்றார். இவருக்கு 4 வயதில் தருனேஷ்வரன் என்ற மகன் உள்ளார். நேற்றிரவு 11.30 மணியளவில் தருனேஷ்வரன் பாத் ரூம் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார். தந்தை தக்‌ஷனாமூர்த்தி சிறுவனை பாத்ரூம் அழைத்து சென்றார். பின், உள்ளே சென்று அம்மாவுடன் தூங்கு என சொல்லிவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து அமர்ந்துள்ளார்.
வீட்டுக்குள் சென்ற சிறுவன் ஷோபாவின் மீது ஏறி விளையாடும் போது ஈரக்கையுடன் ஃபேனை போடுவதற்கு சுவிட்ச் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தருனேஷ்வரன் மயக்கமடைந்துள்ளார்.

சிறிது நேரம் கழித்து பிள்ளையை தன் அருகில் காணவில்லை என்பதை அறிந்த தருனேஷ்வரனின் தாய் சிறுவனை தேட, சிறுவனோ ஹாலில் எப்போதும் போல கோவமாக படுத்திருப்பது போல கிடந்துள்ளதை கண்டுள்ளார்.

 

மாநிலச்செய்திகள்