எனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி

47 Views
Editor: 0

சென்னை : ''நான் பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்; எனக்கு ஹிந்தி தெரியாது,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார்..

எனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி:

சென்னை : ''நான் பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்; எனக்கு ஹிந்தி தெரியாது,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார்.

டில்லியில் இருந்து, நேற்று மாலை சென்னை திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி:என் உணர்வுகளை புரிந்து கொண்டு, சி.ஐ.எஸ்.எப்., தலைமையகம், உடனடி நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி. இப்பிச்னை, இங்கு மட்டுமல்ல; அரசு அலுவலகங்களில் குறிப்பாக, மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கக் கூடிய பிரச்னை.

இப்பிரச்னையை சரி செய்தால், சாரதாரண மக்களுக்கும் இந்தியர்கள் தான்; நாட்டில் மரியாதை இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும். மாநில உரிமைக்கும், மொழிக்கும் உரிமை உள்ளது என்ற நம்பிக்கை அனைவருக்கும் வரும்.நான் பள்ளியில், தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகள் மட்டுமே படித்தேன்; ஹிந்தி எனக்கு தெரியாது.


latest tamil news

நான் டில்லி போய், இத்தனை ஆண்டுகள் ஆகிறது. இன்னும் ஹிந்தி கற்றுக்கொள்ளவில்லை. அங்கிருக்கும் எல்லா தலைவர்களுக்கும் அது தெரியும். ஹிந்தி தெரிந்தால் தான், இந்தியராக இருக்க முடியும் என்பது அவமானம். நான் இதுவரை யாருக்கும் ஹிந்தியில் மொழி பெயர்த்தது கிடையாது. ஆங்கிலத்தில் இருந்து, தமிழில் கூட யாருக்கும் மொழி பெயர்த்தது கிடையாது.

அப்படி நான், ஹிந்தியில் மொழி பெயர்த்தேன் என்றால் நிரூபிக்கட்டும். தி.மு.க., - பா.ஜ., இடையே தான் போட்டி என, பா.ஜ.,வினர் கூறி, சிலர் கனவுலகில் வாழ வேண்டும் என்றால் வாழட்டும்; அதைப்பற்றி எனக்கு கவலை கிடையாது. இவ்வாறு, கனிமொழி கூறினார்.

 

மாநிலச்செய்திகள்