ஐந்து மணி நேரத்தில் சரி செய்யப்பட்ட உடைந்த பாலம்!!! இளைஞர்களின் முயற்சியால் வெற்றி!!
இடுக்கி மாவட்டம் கட்டப்பனா அருகே மாணவர்கள் ஒன்றிணைந்து வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை 5 மணி நேரத்தில் சீரமைத்து உள்ளார்கள். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது குறிப்பாக முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிகக் கனத்த மழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் மூணாறு அருகே ராஜமாலையில் மிகப்பெரிய நீர் சரிவு ஏற்பட்டுள்ளது. பலரும் மண்ணில் புதைந்து போயின உடல்களை மீட்கும் பணி ஆறு நாட்களாக நடந்து வருகிறது. உள்ளூர் மக்கள் மீட்பு பணியில் உதவி புரிந்து வருகின்றனர். மேலும் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகே உள்ள மலாமாலா கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தை இணைக்கும் மலாமாலா-சப்பாத் சாலையில் பெரியார் ஆறு ஓடுகிறது. இந்த பாலம் கனமழை காரணமாக நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்த நிலையில் பாலத்தை சரிசெய்ய இளைஞர்கள் முயற்சி செய்து வெற்றியும் பெற்றுள்ளனர்.
வெள்ள நீரில் மூழ்கியும், சிதறிய கற்களை சேகரித்து நீர் ஓட்டத்திற்கு தடையாக இருந்த பெரிய மரக்கட்டைகளை தண்ணீரில் இறங்கி அகற்றியும் மிக ஆபத்தான பணியை துணிச்சலுடன் அந்த மாணவர்கள் துணிச்சலுடன் செயல்பட்டனர். உடலில் கயிறு கட்டி தண்ணீரில் இறங்கி இறங்கியவர்கள் சேகரிக்கப்பட்ட கற்களை பக்கங்களில் வைத்தும் அத்துடன் ஆற்றின் பாதையில் மணல் மூட்டைகளை அடுக்கியும், காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பணி மாலை 4 மணி வரை பலத்த மழை வெள்ளம் என்றும் பாராமல் அந்த பாலத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த தகவலை கட்டப்பனாவின் நண்பர்கள் குழுவின் ஜோஷி மணிமாலா தெரிவித்துள்ளார். முல்லை பெரியார் அணையில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மலாமாலா கிராமம். இந்த கிராமத்தில் 2018ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது வண்டிபெரியார் நகரை கிராமத்தை இணைக்கும் பாலம் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கிராம மக்கள் தற்காலிக ஏற்பாடுகளை நம்பித்தான் செயல்பட்டு வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக பலத்த மழை வெள்ளம் காரணமாக மலாமாலா கிராமம் மற்றும் பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தான் இருந்து வந்தது.
வெள்ள நீரில் நீந்தத் தெரிந்த ஒரு சிலர் மட்டுமே அவர்களின் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்லும் நிலைமை ஏற்பட்டது. அங்கு கிராமத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை மிகத் துயரமானதாக இருந்தது. இதனால் துயரத்தைக் கண்டு வேதனை அடைந்த அந்த இளைஞர்கள் பாலத்தை சரி செய்ய முடிவெடுத்தனர்.
இதுபற்றி ஜோஷி மணிமாலா என்பவர் கூறுகையில் “மலாமாலா கிராமத்தில் வசித்த பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளிகளை அவசர காலத்தில் நகரத்தை அடைய அவர்களுக்கு வேறு வழிகளும் கிடையாது, தோட்டங்கள் வழியாக வண்டி பெரியாருக்கு சிறிய சாலைகளில் இருந்தாலும் அவற்றில் அவசர காலத்தில் பயன்படுத்த பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது, எனவே பாலத்தை சரிசெய்ய என் நண்பர்கள் குழுவினை சேர்த்து களம் இறங்கினேன், ஆரம்பத்தில் ஒரு சிலரே பணிகளைச் செய்தனர், ஃபேஸ்புக்கில் நேரலை செய்த பின்னர் ஏராளமானோர் இதை சரி செய்ய முன்வந்தனர். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்டியன் யூத் இயக்கம் (OCYM) மற்றும் கட்டப்பனா ஆஃப்-ரோட் கிளப் ஆகியவை நண்பகலுக்குள் இணைந்தனர். இதனால் மக்கள் வலிமை 150 பேர் ஆக அதிகரித்தது இவர்கள் அனைவரும் தானாக முன்வந்து பாலத்தை சரிசெய்தனர். இறுதியில் கிராமவாசிகள் மகிழ்ச்சிக்காக சில வாகனங்களை பாலத்தின் மீது ஓட்டினோம்” என்று ஜோஷி கூறினார்