யாசகம் பெற்று வாழ்ந்து வரும் முதியவர்… அரசுக்கு அளித்த கொரோனா நிதி எவ்வளவு தெரியுமா?

106 Views
Editor: 0

யாசகம் பெற்ற பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக 10000 வீதம் 5வது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார்..

யாசகம் பெற்று வாழ்ந்து வரும் முதியவர்… அரசுக்கு அளித்த கொரோனா நிதி எவ்வளவு தெரியுமா?

 

யாசகம் பெற்ற பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக 10000 வீதம் 5வது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள் , ஒரு மகள் என 3 பி ள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில் ம னைவி இ றந்த பின்பு பொ துசேவையில் அதிக ஆர்வம் கொண்டார்.

பல்வேறு பகுதிகளுக்கு சென்று யா சகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யா சகம் பெற்று வருகிறார்.

இவ்வாறு யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை கடந்த மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார். அதைத்தொடர்ந்து நான்கு முறை ரூ.10000 வீதம் மொத்தமாக இதுவரை 50 ஆயிரம் பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார்.

இவர் ஏற்கனவே யா சகம் பெற்று புயல் நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்தவராகும் என்பது குறிப்பிடத்தக்கது.

யாசகம் பெற்ற பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாளான கல்வி வளர்ச்சி நாளில் பள்ளிகளுக்கு உதவிசெய்வதை வழக்கமாக கொண்ட பூல்பாண்டியன், தற்போது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படும் ஏழை எளியோருக்கு உதவும் வகையிலான நிதி வழங்கிவருகிறார்.

தொடர்ந்து இந்த ஆண்டு முழுவதிலும் வசூல் செய்து கொரோனா நிவாரண நிதி அளிப்பேன் என தெரிவித்தார்.

மாநிலச்செய்திகள்