பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வு கருத்துக்களை கண்டுகொள்வதில்லையா? பேஸ்புக் விளக்கம்

35 Views
Editor: 0

பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்ற விவாதம் எழுந்தது..

புதுடெல்லி,

பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வு கருத்துக்களை கண்டுகொள்வதில்லையா? பேஸ்புக் விளக்கம்;

 

பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்ற விவாதம் எழுந்தது.

பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று வெளிநாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பாஜகவை விமர்சித்து இருந்தார்.   வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கட்டுரையை மேற்கோள் காட்டிய ராகுல் காந்தி, இந்தியாவில் வாட்ஸ்அப், முகநூலை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.” என்று கூறியிருந்தார்.

 

 

ஆனால், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தங்களது சொந்த கட்சியில் உள்ள தலைவர்களை கூட  கட்டுப்படுத்த  முடியாதவர்கள் முழு உலகத்தையும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கட்டுப்படுத்துவதாக கூச்சலிடுகின்றனர் என கூறி ராகுலின் கருத்தை மறுத்து இருந்தார். 

 

ராகுலின் குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், பேஸ்புக் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. பேஸ்புக் கூறும் வகையில், “  யார் வெறுக்கத்தக்க வகையில் பேசினாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது கட்சி தொடர்பையோ பொருட்படுத்தாமல், ஃபேஸ்புக்  பாரபட்சமற்ற தனது  கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

 

இது குறித்து  பேஸ்புக் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ வன்முறையை தூண்டும் வகையிலான  வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கள் மற்றும் கருத்துக்களை நாங்கள் தடை செய்கிறோம். எந்த ஒரு நபரின் அரசியல் அந்தஸ்து அல்லது கட்சி சார்பற்று உலக அளவில், எங்களது கொள்கைகளை அமல்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

மாநிலச்செய்திகள்