6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காமல் இருந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

49 Views
Editor: 0

சென்னை: 6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. .

6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காமல் இருந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்; தமிழக அரசு அறிவிப்பு:

சென்னை: 6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு, முதியவர்களின் தடையற்ற வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை அவர்களுக்குரிய வங்கிக்கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.

இந்நிலையில், 6 மாதங்களுக்கும் மேல் அந்தப் பணத்தை எடுக்காமல் இருந்தால், அதன்பிறகு ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு முடிவெடுத்த்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அந்தப் பணம் பெரும்பாலும், முதியவர்களின் உடல்நிலை, குடும்பத்தீன் பெரும் முடிவுகள் ஆகியவற்றின் போது பயன்படுத்தப்படும். அதுவரை வங்கிக்கணக்கில் இருப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் என்றுதான் இது நாள் வரையிலும் கருதி வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஆபத்தாக அமைந்துள்ளது இந்த உத்தரவு. இதனால், இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

மாநிலச்செய்திகள்