நீட் தேர்வை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி:
புதுடில்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட், வரும் செப்.,13 ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஜேஇஇ தேர்வுகளும் செப்., 1 முதல் 6 வரை நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தேர்வுகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்க வேண்டும் எனக்கோரி 11 மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், தேர்வை தள்ளிவைப்பதால், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். கொரோனாவால், வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திவிட முடியாது. அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுடன் நகர்ந்து தான் ஆக வேண்டும். ஓராண்டை இழக்க மாணவர்கள் தயாராக உள்ளனரா என கேள்வி எழுப்பியுள்ளது.