மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞர் கைது:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனித தலையை சுட்டு சாப்பிட்ட சைகோ இளைஞர் மற்றும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாகப்பட்டினத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் ரெல்லி வீதியில் கோணி பையில் மனித தலை இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் அந்த பையை அங்குள்ள பாழடைந்த வீட்டில் வசிக்கும் ராஜு என்ற இளைஞர் எடுத்துச் சென்றுள்ளார். இதனைக் கண்ட மக்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மனித தலையை அடுப்பில் சுட்டு ராஜூவும், அவருடன் இருந்த பெண்ணும் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ராஜூ அடிக்கடி மயானத்திற்கு சென்று வந்தது தெரியவந்துள்ளது.