ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,544 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி:
திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 லட்சத்தி 34 ஆயிரத்தி 940 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 87,803 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 44 ஆயிரத்து 45 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3092 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.