விநாயகர் சதுர்த்தி: தலைவர்கள் வாழ்த்து...

45 Views
Editor: 0

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளை (ஆக.,22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது..

விநாயகர் சதுர்த்தி: தலைவர்கள் வாழ்த்து...

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளை (ஆக.,22) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

கவர்னர் பன்வாரிலால் வெளியிட்ட அறிக்கை:

தமிழக மக்களுக்கு சிறப்பான, வளமாக எதிர்காலம் அமைய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். விநாயகர் சதுர்த்தி திருநாள் அமைதி, செழிப்பு, நல்லிணக்கம், நல்ல உடல்நலத்தை வாரி வழங்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் இபிஎஸ் வெளியிட்ட வாழ்த்து செய்தி:

விநாயகர் சதுர்த்தி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். முழு முதற்கடவுளான விநாயகப் பெருமாளின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ, செம்பருத்திப் பூ, அரளி மலர், வில்வ இலை போன்றவைகளைக் கொண்டு மாலைகள் சூட்டி, கொழுக்கட்டை, சுண்டல், பொரி, அவல், கரும்பு, பழங்கள் போன்றவற்றை படைத்து, பக்தியுடன் வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.
latest tamil news

விநாயகரின் திருவருளால், மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

மாநிலச்செய்திகள்