CoronaVirus: தமிழகத்தில் 3.67 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! - புதிதாக 5,995 பேருக்குத் தொற்று:
தமிழகத்தில் புதிதாக 5,995 பேருக்குத் தொற்று!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,67,430 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,764 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை, 3,07,677 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 101 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 6,340 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் மேலும் 1,282 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,282 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,22,757 ஆக அதிகரித்துள்ளது.