நீட், ஜேஇஇ தேர்வுகளை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது: 

45 Views
Editor: 0

நீட், ஜேஇஇ தேர்வுகளை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில்மனு தாக்கல்.

நீட், ஜேஇஇ தேர்வுகளை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க முடியாது: உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் பதில்மனு தாக்கல்:

புதுடெல்லி: நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. ஜேஇஇ, நீட் ஆகிய நுழைவுத் தேர்வுகள் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். ஆனால் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கு தேர்வுகள் தள்ளி போகின. ஆனால் இப்போதும் நோய்கள் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் தேர்வுகள் நடத்த வேண்டாம், தேர்வுகளை ஒத்திப் போட வேண்டும் என்று 11 மாணவர்கள் சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த திங்கள்கிழமை இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

இருப்பினும், மாணவர்கள் தொடர்ச்சியாக தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் வாயிலாகவும், கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, இப்போது தேர்வுகளை நடத்தினால் மாணவர்கள் தற்கொலை செய்யும் சூழ்நிலை உருவாகும் என்பதால், அதைத் தள்ளிப் போட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுபோன்ற பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதால், தேர்வுகள் தள்ளி போகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்ட அறிவிப்பில் ஜேஇஇ, நீட் ஆகிய தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.  இதன் தொடர்ச்சியாக தற்போது மருத்துவக் கவுன்சிலும் நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் பிரமாண பத்திரத்தில், எக்காரணம் கொண்டும் இவ்வாண்டுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது. மேலும் இந்தியாவுக்கு வெளியே நீட் தேர்வு மையங்களை அமைக்க ஏற்பாடு செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாடு முழுக்க மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலச்செய்திகள்