தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 250.25 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை

46 Views
Editor: 0

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 250.25 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 250.25 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை:

 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 250.25 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று மருந்துகடை, பால் விற்பனையகம் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

 

டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் முந்தைய நாளான நேற்றே (சனிக்கிழமை) அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கி வைத்து வருகின்றனர். இதனால் சனிக்கிழமை மட்டும் அதிக அளவிற்கு விறப்பனை நடக்கிறது. கடந்த வாரம் சென்னை காவல் எலலைக்குட்பட்ட இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

இதனால் தமிழகம் முழுவம் நேற்று மட்டும் 250.25 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மண்டலத்தில் 50.65 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக 52.56 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 51.27 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலச்செய்திகள்