“தமிழ்நாட்டு வேலைகள் தமிழ்நாட்டு மக்களுக்கே” – ட்விட்டரில் டிரெண்டான ஹேஷ்டேக்.

40 Views
Editor: 0

பொருளாதார நெறுக்கடி, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கொரோனாவும் வந்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. .

“தமிழ்நாட்டு வேலைகள் தமிழ்நாட்டு மக்களுக்கே” – ட்விட்டரில் டிரெண்டான ஹேஷ்டேக்.

 

பொருளாதார நெறுக்கடி, வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே கொரோனாவும் வந்ததால் மக்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. சிறு குறு தொழிலாளர்கள் முதல் பட்டதாரிகள் வரை பலரும் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இதை சரிகட்ட மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் நாடு முழுவதும் மாநில வாரியாக வேலை இன்மை பிரச்னை நாளுக்கு நாள் வலுபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த 5 மதங்களுக்கு முன்பு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் சொந்த மாநில மக்களுக்கு பணி வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கான உத்தரவையும் பிறப்பித்தார்.

இதேபோல், சமீபத்தில் மத்தியபிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானும் இதே உத்தரவை பிறப்பித்தார். இதேபோல் கடந்த 1968 நவம்பர் 5 முதல் மகாராஷ்டிராவில் உள்ள தனியார் வேலைகளில் 50 முதல் 80 சதவீதம் வரை அம்மாநில மக்களுக்கே என சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தற்போது வேலையின்மை பிரச்னைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. இதனால், சொந்த மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என, தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் ட்விட்டரில் தமிழ்நாட்டு வேலைகள் தமிழ்நாட்டு மக்களுக்கே என்ற ஹேஷ்டேக் உருவாக்கி அதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மாநிலச்செய்திகள்