11ஆம் வகுப்பு சேர்க்கை இன்று முதல் தொடங்கியது!!!
மாணவர்களுக்கான 11ஆம் வகுப்பு சேர்க்கை அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் இன்றுமுதல் தொடங்கியது.
கடந்த 17ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பிற்கான சேர்க்கை ஆரம்பமானது. 10ஆம் வகுப்பிற்கான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து முடித்த நிலையில், 11ஆம் வகுப்பிற்கான சேர்க்கை இன்று முதல் ஆரம்பம் ஆனது.
11ஆம் வகுப்பு சேர்க்கையில் அதே பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாகவும், மேலும் இப்பணியில் ஈடுபடும் போது முக கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் இட ஒதுக்கீட்டின் பெயரில் சேர்க்கை நடைபெறுவதாகவும், மதிப்பெண்களை கரணம் காட்டி ஒதுக்குவதில்லை என்றும் பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது.