வெயில் காலத்தில் வீடு அனலாக இருக்கிறதா? செலவில்லாமல் வீட்டை குளுமையாக்க கூலான ஐடியா! பெரிய செலவெல்லாம் இல்லைங்க!
இப்போதெல்லாம் கட்டும் வீடுகள் பெரும்பாலும் கான்கிரீட் தான். இன்னும் சிலர் பழங்கால முறைப்படி வீடு கட்டுகின்றனர் ஆனால் அவ்வாறு வீடு கட்டுவதெல்லாம் அரிது தான். பழமையான முறைப்படி வீடு கட்ட தெரிந்த வேலை ஆட்களை பிடிப்பதும் எளிதல்ல. ஏன் பழமையான கட்டுமானம் பற்றி கூறுகிறேன் என்றால், அம்முறையில் கட்டும் வீடுகள் எப்போதுமே குளுமையாக இருக்கும் படி வடிவமைப்பார்கள். அது ஒரு கலை. வசதிக்கு ஏற்றவகையில் மட்டுமல்ல, சீதோஷணதிற்கும் ஏற்றவகையிலும் கட்டுவதால் தான் கலை என்றேன்.
இப்போது வீட்டை கட்டும்போதே, ஒரு சில யுக்திகளை கையாண்டால் வீட்டை எப்போதும் குளுமையாக வைத்திருக்க முடியும். கான்கிரீட் விட்டம் மீது சுண்னாம்பு தூள் கலவையை இரண்டரை இன்ச் பரப்பி அதனோடு 10mm ஜல்லி பொடியோடு சிமெண்ட் கலவையை பரப்பி விடுவதன் மூலம் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியும். இதனால் மழைக்காலத்தில் வெதுவெதுப்பாகவும் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும்.
இது இல்லாமல் கான்கிரீட் போடும்போது எப்போதும் போல கவர் ப்ளாக் பதிலாக மண்ணால் செய்யப்பட்ட ஓட்டை பதித்தால் மேலும் குளுமையாக்கலாம். அடுத்து சுவர் எழுப்ப ஃப்ளைஏஸ் கற்கள் பயன்படுத்தாமல் செங்கலை பயன்படுத்தினால் ஓரளவு வெப்பம் தணியும்.
சரிங்க, இதெல்லாம் இனிமேல் தான் வீடு கட்ட உள்ளவர்களுக்கு பொருந்தும். ஏற்கனவே வீடு கட்டியாச்சு. ஆனால் எப்போதும் வீடு அனலாகவே உள்ளது என இக்கட்டமாக உணர்பவர்கள், மொட்டை மாடியில் இரண்டு மூன்று முறை வெள்ளை அடித்தால், ஓரளவிற்கு அனல் குறையும்.
காற்று வசதி குறைவாக உள்ள அறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் வாங்கி பொருத்தலாம். நிரந்தர பலனும் ஒன்று உள்ளது. வீட்டை சுற்றி மரம் செடிகொடிகளை வளர்த்தால் வெப்பக்காற்று வீட்டுக்குள் நுழைவது ஓரளவு தடுக்கப்படும். இதெல்லாம் செய்ய முடை பட்டுக்கொண்டு தான் ஏசியை வாங்கி மாட்டுகிறோம். அது நமக்கும் ஆ பத்து, சூழலியலுக்கும் ஆ பத்து.