தமிழகத்தில் ரத்தாகிறதா இ-பாஸ் நடைமுறை?

45 Views
Editor: 0

சென்னை: இ-பாஸ் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். .

தமிழகத்தில் ரத்தாகிறதா இ-பாஸ் நடைமுறை? காணொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை:

சென்னை: இ-பாஸ் மற்றும் கொரோனா பரவல் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஆலோசனை நடத்தி வருகிறார். இ-பாஸ் முறையை ரத்து செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இ-பாஸ் முறையை ரத்து செய்ய பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கொரோனா பரவியதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அவற்றில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் முறை அமலில் உள்ளது. இதேபோல் மாநிலம் விட்டு மாநிலம் செல்லவும் இபாஸ் கட்டாயம் என்று அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிக்கலை அனுபவித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களுக்குள்ளும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்று புதுச்சேரியில் இபாஸ் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இ பாஸ் விவகாரத்தில் ஊழல், முறைகேடு நிகழ்ந்ததால் எதிர்க்கட்சிகள் இ பாஸ் முறையை ரத்து செய்ய கோரினர். இதனால் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் ஏற்கனவே இ-பாஸ் முறையை ரத்து செய்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டார்.

 

மாநிலச்செய்திகள்