பத்திரப் பதிவில் `மூலப்பத்திரம்' அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?

45 Views
Editor: 0

தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்..

பத்திரப் பதிவில் `மூலப்பத்திரம்' அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?

 

தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்.

எங்களுடைய பரம்பரைச் சொத்துக்கு பட்டா மட்டுமே உள்ளது. அதற்குப் பத்திரம் பதிவுசெய்வது எப்படி?"

- செங்குட்டுவேல், பழனியப்பன்

``பரம்பரைச் சொத்துக்குப் பட்டா மட்டுமே இருந்தால் கவலையில்லை. ஏதாவது பத்திரம் வேண்டுமென்றால், குடும்பத்துக்குள்ளேயே ஒருவருக்கு அடமானம், குத்தகை போன்ற ஆவணம் எழுதி, பதிவு செய்தால், உங்களின் பெயருக்கு வில்லங்கம் மாறிவிடும். சில நாள்கள் கழித்து, பதிவான அடமானம் அல்லது குத்தகையை ரத்து செய்து பத்திரம் பதிவு செய்தால், வில்லங்கச் சான்றில் மீண்டும் உங்கள் பெயர் பதிவு இடம்பெறும்.''

பத்திரம்

பத்திரம்

``பத்திரப் பதிவில் மூலப்பத்திரம் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?"

- சி.கார்த்திகேயன், சாத்தூர் - 626 203

``ஆம். ஒருவருக்கு தாய் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவுக்கு தாய்ப்பத்திரம் சொத்துக்கு முக்கியம். தாய்ப்பத்திரம் இல்லாத சொத்து அநாதைதான். தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்."

``தாம்பரம் வரதராஜபுரத்தில் பெரும் நிலப்பரப்பு விற்கப்பட்டது. 3,600 சதுர அடி நிலத்தை நான் 1980-ல் வாங்கினேன். விற்றவர் தாய்ப்பத்திரம் தரவில்லை. என் நிலத்துக்கு அடுத்த இடத்தில் வீடு கட்டியவரிடம் தாய்ப்பத்திரம் வாங்கினால் செல்லுமா? விளக்கம் தரவும்."

- ராஜு, இ-மெயில் மூலம்

``தேவையில்லை. பெரும் பரப்பைப் பிரித்து பிளாட் போட்டுவிட்டால் தாய்ப்பத்திர நகல் மட்டுமே தருவார்கள். நீங்கள் வைத்திருக்கும் 3,600 சதுர அடிக்கு உரிய விற்பனைப் பத்திரத்துக்கு தாய்ப்பத்திர நகலே போதும்."

- சொத்துப் பத்திரம் பதிவு தொடர்பாக இதுபோன்ற வாசகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு வழக்கறிஞர் மற்றும் முன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர் (முத்திரை மற்றும் பதிவு - சட்ட அலுவலர்) ஆ.ஆறுமுக நயினார் அளித்த பதில்களை முழுமையாக நாணயம்.

பத்திரம்

 

மாநிலச்செய்திகள்