என்ன இங்கையும் இ-பாஸ் முறை ரத்தா??
கர்நாடகாவில் இபாஸ் முறையை ரத்து செய்துள்ளது அம்மாநில அரசு . தனிமை படுத்தும்
நடவடிக்கையும் கிடையாது .
கொரோனா அதிகரித்து வரும் இந்த சூழலில் மத்திய அரசின் அறிவிப்பை ஏற்று கர்நாடகாவில்இபாஸ் முறையை ரத்து செய்துள்ளது. மேலும் அம்மாநில எல்லையில் நடத்தப்படும்
கொரோனா சோதனை நிறுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
பிற மாநிலத்தில் இருந்தும் கர்நாடகா செல்லவும், கர்நாடகாவிலிருந்து பிற மாநிலம் செலவும் இனி இ பாஸ் தேவையில்லை என அறிவித்துள்ளது. மேலும் பெற மாநிலங்களிருந்து
வருவோர்க்கு மருத்துவ பரிசோதனை தேவையில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை இனி நடத்தப்படாது என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.