சென்னையில் நகராட்சி ஊழியர்கள் அத்துமீறல்: கொரோனா சிகிச்சைக்கு பின்பும் வீடுகளை அடைத்ததால் பொதுமக்கள் சிரமம்.
சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் அத்துமீறலில் கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவரின் வீட்டுக் கதவு அடைக்கப்பட்டுள்ளது. இதில் இதயநோயாளி உள்பட 4 பேர் உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். நகராட்சி ஊழியர்களின் அத்துமீறலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்த பின்னரும் கதவை அடைத்ததால் பொதுமக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 14 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு பின் திரும்பியவர்களின் வீடுகளையும் நகராட்சி ஊழியர்கள் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சென்னை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வண்ணம் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மற்றவர்கள் தீண்டத்தகாதவர்கள் போல் பார்க்கின்றனர்.