தமிழக மலர்களுக்குத் தடை : ஓணம் பண்டிகைக்காக விவசாயிகள் கோரிக்கை!

47 Views
Editor: 0

ஈரோடு :ஓணம் பண்டிகைக்கு வெளி மாநில மலர்களுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளதால் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

தமிழக மலர்களுக்குத் தடை : ஓணம் பண்டிகைக்காக விவசாயிகள் கோரிக்கை!

 

ஈரோடு : ஓணம் பண்டிகைக்கு வெளி மாநில மலர்களுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளதால் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், கொத்தமங்கலம், தாண்டாம்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, காக்கடா, ரோஜா, ஜாதிமல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது.

இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், மைசூரு, பெங்களூரு, கேரளா, மும்பை, டில்லி போன்ற நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பபடுகிறது.

இந்நிலையில் கொரானோ வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் முதல் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய மல்லிகைப்பூ விற்பனை நடைபெறவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது கடந்த ஐந்து மாதங்களாக பூக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்லாததால் கடும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை வரவுள்ளது. வருடா வருடம் ஓணம் பண்டிகைக்காக சத்தியமங்கலத்திலிருந்து ஏராளமான பூக்கள் கேரளா செல்வது வழக்கம். இந்த வருடமும் ஓணம் பண்டிகைக்கு பூக்களை அனுப்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் கேரள முதல்வர் பினராய் விஜயன், கொரானா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து பூக்கள் கொள்முதல் செய்வதை தவிர்த்து, கேரளாவில் கிடைக்கும் பூக்களை வைத்து, ஓணம் பண்டிகையை கொண்டாட உத்தரவு பிறபபித்துள்ளார். இது சத்தியமங்கலம் பூ வியாபாரிகளை கவலை அடைய செய்துள்ளது என கூறினர்.

கேரளாவிற்கு தினசரி பால், காய்கறிகள் கொண்டு செல்லப்படும்பொழுது மலர்களை கொண்டு செல்ல தடை விதித்திருப்பது ஏற்புடையதல்ல எனக்கூறினர். இது குறித்து தமிழக முதல்வர் கேரள முதல்வருடன் பேசி தமிழகத்தில் இருந்து பூக்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் இதனை நம்பியுள்ள 40 கிராம விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டி வரும் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

மாநிலச்செய்திகள்