பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு!!

44 Views
Editor: 0

சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண்கள் இன்று வெளியிடப்படுகிறது..

பொறியியல் மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு!!

 

சென்னை : பொறியியல் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்களுக்கான ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண்கள் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 206 பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளளனர். இதனால் அவர்களுக்கான சம வாய்ப்பு எண்களை இன்று அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிடுகிறார்.

சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி அன்பழகன் வெளியிடுகிறார். இது குறித்து தகவலை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த மாதத்தில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மாநிலச்செய்திகள்