வாணியம்பாடி அருகே துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது.

52 Views
Editor: 0

வாணியம்பாடி அருகே துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது.
ரூ .2 லட்சம் மதிப்பிலான 40 கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்..

வாணியம்பாடி அருகே துவரை தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி கைது.

ரூ .2 லட்சம் மதிப்பிலான 40 கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.

Image may contain: plant, outdoor and nature

வாணியம்பாடி ஆக 24 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பூங்குளம் பகுதியில் ஒரு மாத காலமாக கஞ்சா செடி வளர்த்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. தகவலின் பேரில் மாவட்ட போதை தடுப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மற்றும் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் ஆகியோர் தலைமையிலான போலீசார் பூங்குளம் கிழக்கு வட்டம் பகுதியில் கடந்த5 நாட்களாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பூபதி(65) என்பவர் தனக்கு சொந்தமான ஏழு சென்ட் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த துவரம் பயிர் தோட்டத்தில் நடுவில் கஞ்சா செடிகளையும் சேர்த்து வளர்த்து வந்துள்ளதை கண்டறியப்பட்டு அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 35 கிலோ கொண்ட 40கஞ்சா செடிகளை போலீசார் பிடிங்கி அங்கேயே தீயிட்டுக் கொளுத்தி அளித்தனர்.

Image may contain: one or more people, people standing, tree, plant, outdoor and nature

 

பின்னர் விவசாய நிலத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த விவசாயி பூபதி என்பவரை ஆலங்காயம் போலீசார் கைது செய்து போதை தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போதை தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மாநிலச்செய்திகள்