“அரியர் மாணவர்களின் அரசனே நீ வாழ்க!” – முதல்வருக்கு மாணவர்கள் புகழாரம்..!
கொரோனாவால் உலகமே திண்டாடி வரும் நிலையில் மாணவர்களுக்கு மட்டும் ஒரே கொண்டாட்டம்தான். ஊரடங்கு அறிவித்த நாள் முதல் பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோடை விடுமறை குறைவாகத்தான் கிடைக்குமோ என்ற ஏக்கத்துடன் இருந்த சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் நீண்ட விடுமுறையை கேட்டு மகிழ்ச்சியின் ஆராவாரத்தில் ஆர்பரித்துப்போயினர்.
இந்த சூழலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. மாணவர்கள் தேர்வு எழுத வரமுடியாத சூழல் நிலவியது இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த செய்தியை கேட்டு, வயிற்றில் பாலை வார்த்த “எங்கள் தெய்வமே” என முதலமைச்சர் பழனிசாமிக்கு மாணவர்கள் தீபாராதனை காண்பித்து நன்றி செலுத்தினர்.
இந்த சூழலில் தேர்வு எழுத பதிவு செய்திருந்த அரியர் வைத்த மாணவர்கள் ஆல் பாஸ் என நேற்று மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.
இதை கேட்ட மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டதுடன் முதலமைச்சருக்காக இரவோடு இரவாக கட்அவுட் அடித்தனர். ஈரோடு மாவடத்தின் பல்வேறு இடங்களில் “அரியர் மாணவர்களின் அரசனே நீ வாழ்க ” என கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மனதில் நின்ற தலைவராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெற்றி நடை போடுகிறார்.