முதல்வர் அதிரடி.. சென்னையில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை செய்ய உத்தரவு!!
கொரோனா தடுப்பூசி தமிழ்நாட்டிக்கு பரிசோதிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகின் மிக பெரிய சவாலாக உள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் உலகம் முழுவதும் போட்டிபோட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு என்னும் தடுப்பூசியை மற்ற நாடுகள் பரிசோதித்து வருகிறது. இந்த சூழலில் நமது இந்தியாவிலும் பரிசோதிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
கூறுகையில், "கொரோனா தொற்றுகாண சிகிச்சையை தமிழக அரசு வலுப்படுத்தி வருகிறது. இங்கு அரசு
மருத்துவமனைகளில் உட்கட்டமைப்புகள் உயர்த்தப்பட்டு வருகிறது.
மேலும் உயிர் காக்கும் மற்றும் வீரியமிக்க மருந்துகளான Remdesivir, Tocilizumab, Enoxaparin நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ்
நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே பேருதவி செய்யும் என்பது மருத்துவ நிபுணர்களின் கருத்தாகும்.
இதனால் பல்வேறு நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் மும்மரம் காட்டி வருகிறது.இச்சூழலில் இங்கிலாந்தை சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் ஒரு தடுப்பு ஊசியை கண்டுபிடித்துஅத்தனை ஆரோகியமான நபர்கள் மீது செலுத்தி அதன் நோய்யெதிர்ப்பு திறனைகண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.இந்த தடுப்பு ஊசி கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும்வகையில்அமையும் என்பது உலகில் உள்ள அனைத்து மருத்துவ குழுகளின் எதிர்பார்ப்பு.
இந்த தடுப்பு ஊசியை சோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவில் ஒரு பகுதியாக சென்னையை தேர்வு செய்துள்ளது. இதற்கு அரசின் பொது சுகாதார துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநரை முதன்மை ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை 18 வயதிற்கு மேற்பட்ட ஆரோகியமானவர்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றும் இந்த ஆராய்ச்சியை சென்னை சேத்துப்பட்டில் உள்ள காச நோய் ஆராய்ச்சி கழகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இனைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்த கோவிஷீல்டு தடுப்பு ஊசியை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இடங்களில் சுமார் 300 பேருக்கு சோதனை நடத்த முடிவு செய்ய பட்டுள்ளது