செப்டம்பரில் வெளியாகவுள்ள புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்!!!
வரும் செப்டம்பர் மாததிற்கான புதிய கட்டுபாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த தகவல்
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31 வரை வரிவித்துள்ளது அரசு. வரும் செப்டம்பர் முதல் புதிய தளர்வுகள் மட்டும் கட்டுப்பாடுகள் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நாடுமுழுவதும் மேட்டரே ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாகவும். மேலும் அந்தந்த ஊர்களுக்கு ஏற்ப முடிவில் மாற்றம் இருக்கலாம், டிக்கெட் எடுப்பது முதல் ரயில் பயணம் வரை அனைத்து விதிகள் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
தனியார் பார்க்குகளுக்கு அனுமதிக்க வாய்ப்புள்ளதாகவும், ஆனால் அங்கு மது அருந்த
அனுமதி மறுத்து, மது பாட்டில்கள் வாங்கி செல்லலாம் என தெரிவிக்கலாம் என்று தகவல்.
பொதுக்கூட்டங்கள்,விளையாட்டு மாற்று கலை நிகழ்ச்சிகள் போன்ற மக்கள் கூடும்
இடங்களுக்கு அடுத்த மாதம் இறுதி வரை அனுமதி இல்லை என்று தெரிகிறது.
மேலும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் மாத இறுதி வரை திறக்க
வாய்ப்பில்லை என்றும் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன்
திறக்கப்படும் என்று தெரிகிறது.
அந்த அந்த மாநிலங்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு போக்குவரத்து தொடங்கும் என தெரிகிறது.
கட்டுபாட்டில் தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் கொரோனா கட்டுப்பாடு மாநிலங்களில்
தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நீடிக்கும் என்று தெரிகிறது.
திரையரங்குகள் திறக்க அடுத்த மாதம் வரை வாய்ப்பில்லை என்றும் மக்கள் அதிகம்
இல்லாமல் சமூக இடைவெளியுடன் அனுமதிப்பதில் வருமானம் இருக்காது என்று
தெரிவிக்காட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் மாதத்திற்கான ஊரடங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் சில நாட்களில் இது பற்றிய அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.